Wednesday, March 17, 2010

புலிகள்

புலிகள் கொஞ்சம் பதுங்கும் போது
ந‌ரிகள் போடும் ஆட்டமே
ந‌ரிகள் வேஷம் கலையும் போது
புலிகள் வென்று காட்டுமே

புல்லை கண்டு நடுங்கும் மனிதன்
இருக்கும் போதே சாகிறான்
புல்லை கத்தி ஆக்கும் மனிதன்
இறந்த பிறகும் வாழ்கிறான்

உண்ணும் உணவில் இல்லை வீரம்
வீரம் உள்ளது நெஞ்சிலே
வெற்றிச் சங்கை ஊதும் வரையில்
ூக்கம் இல்லை கண்ணிலே...

No comments: