"There are no failures - just experiences and your reactions to them." -Tom Krause
Wednesday, November 17, 2010
Friday, November 12, 2010
*புண்ணியவான்*
*புண்ணியவான்*
*பேச்சுத் துணைக்கு ஆளின்றி
மூச்சுத் துணைக்கு ஆளாயிருந்தார்
சாப்பாட்டுக்கும் சகலத்துக்கும்
பெத்த பிள்ளையை அண்டியிருந்த
கடைசி காலக் கந்தசாமி.*
*தனியறையின்
தறிக் கட்டிலில்
புதைந்துபோன மனுசனுக்கு
வேளாவேளைக்குச் சாப்பாடும்
காலாகாலத்துக்குச் சாவும்
வந்து சேரவில்லை.*
*முணுமுணுப்புடன்
எரிச்சலும் கலந்து வீசப்படும்
உப்பில்லாப் பண்டத்தின் முன்
ஓய்ந்துகிடக்கும் பசி
கண்ணீர் கலந்து பிசைந்தால்
சரியாகிடும் ருசி.*
*இயலாமை சேர்த்து
விழுங்கும்போது
தொண்டையை அடைக்கும்
வயோதிகத் தனிமை.*
*ஒரு திங்கள் மதியம்
தீர்ந்துபோனது
கந்தசாமியின் கஷ்டங்கள்.*
*கூடிய கூட்டம் பேசிற்று
'யாருக்கும் எந்தக் கஷ்டமும் தராம
போய்ச் சேர்ந்துட்டான்
புண்ணியவான்!'*
Subscribe to:
Posts (Atom)